தமிழ் மருத்துவம் -1

*தலைவலி தலைபாரம் நீங்க : நொச்சி இலையெய் கொதிக்க வைத்து இரண்டு செங்கற்களை அதில் போட்டு ஆவி பிடித்தால் தீரும்

*வயிற்று கோளாறுக்கு நல்ல மருந்து : புதினா துவையல்

*நேந்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள்  ஒளி பெரும்.

*வயிற்று போக்கு குணமாக மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண குணமாகும்

*மாங்கொட்டை பருப்பை கைய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 2 வேளை கொடுக்க குடல் பூச்சி அகலும்

*அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுகொண்டால் நெஞ்சுகமறல் நீங்கும்

*வயிற்று பூச்சி ஒழிய பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர சுத்தமாகும்

*எலுமிச்சை சாறு தேன் கலந்து உண்டால் இருமல் படி படியாக குறையும்

*மூச்சு வாங்கும் பிர்ச்சனை  தீர தூதுவளை சிறந்த பரிகாரம்

*மாதுளம் பழசாறு எலுமிச்சை பழசாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை தீரும்

*வெல்வேளை செடிகளை பறித்து நசுக்கி சாறு எடுத்து காலை மாலை 5 சொட்டு வீதம் காதில் விட்டு வர காது வலி குணமாகும்

*முடக்கத்தான் இலை சாற்றை சீரக பொடியோடு போட்டு ஊற வைத்து சில துளிகள் காதில் விட்டு வந்தால் சீழ் வடிவது நிற்கும்

*துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகபருவின் மீது தடவி வர பருக்கள் மறையும்

*துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு குளித்து வந்தால் முகம் அழகு பெறும்

*ஜாதிக்காய் சந்தனம் மிளகு சேர்த்து அரைத்து தடவி வர பருக்கள் மறையும்

*கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு விகிதம் மோரில் கலந்து குடிக்க பாம்பு கடி உள்ளிட்ட பல விஷங்களை முறிக்கும்

*பிரமதண்டு மூலம் 30 கிராம் உள்ளுக்கும் , கடிவாயிலில் கட்டியும் வந்தால் பாம்பு விஷம் இறங்கும்

*அம்மன் பச்சரிசி இலையெய் ஒரு கைப்பிடி அளவு அரைத்து பசும் பாலில் கலக்கி காலையில் மட்டும் 3 நாள் கொடுக்க சிறு நீருடன் ரத்தம் போவது நிற்கும்

*இளம் கொத்துமல்லி இலையெய்  சுத்தம் செய்து சாறு எடுத்து உடல் மீது பூசி காய்ந்தபின் குளித்து வர உடல் தோல் மிருதுவாகும்

*அவுரி வேர் 20 கிராம் , பேரு நெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கலந்து உண்ண  வெள்ளைபடுதல் குணமாகும்

*பெருங்காயம் 2 கிராம், 20 மி நல்ல எண்ணையில் காய்ச்சி வடிகட்டி ஓரிரு துளிகள் காதில் விட காது வலி குணமாகும்  

*விராலி இலையை வதக்கி கட்டிகள் மீது கவனமாக வைத்து கட்டினால் கட்டி அமுங்கி வீக்கம் குறையும்

*கட்டிகள் உடைந்து குணமாக சிவனார் வேம்பு இலையை அரைத்து  பூச குணமாகும்

*குடல் புண் ஆற எழுத்தாணி பூண்டு இலையை அரைத்து தாரளமாக மலம் போகும்படி கொடுக்க குணமாகும்

*யானை கால் வீக்கம் விரை வாதம் நெறி கட்டிகள் நீங்க தழுதாழை இலையை ஆலிவ்  எண்ணையில் வதக்கி கட்ட குணமாகும்

*பீச்சாங்கு இலை சாறு கால் லிட்டர் உட்கொள்ள பாம்பு நஞ்சு முறியும்

*தரா இலையை மை போல அரைத்து புண், பிளவை, கட்டி, படை இவைகளுக்கு தடவி வர விரைவில் குணமாகும்

*ஒரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து அரைத்து ஒரு சிறு உருண்டை தினந்தோறும் அதிகாலை சாப்பிட்டு வர இளமையில் தோன்றும் வயோதிகம் மறையும்

*சிகைக்காய்க்கு பதில் உசில இலை பொடியை எண்ணெய் முழுக்கு போடும் போது உபயோகித்தால் உடல குளிர்ச்சி பெறும்

*கானா வாழை, வேர், தண்டு, இலை  இவைகளுடன் அருகம்புல் சமனாக சேர்த்து மைய அரைத்து  கொட்டைபாக்கு அளவு பாலில் கொடுக்க ரத்தபேதி நிற்கும்.

*கோவைபழம் சாப்பிட பல் நிவாரணம் பெரும்.

*அருகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமாகும்

*எருக்கம் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டி மீது வைத்தால் பழுத்து உடையும்

*வெள்ளை பூண்டு, வசும்பு, ஓமம் சம அளவு எடுத்து அரைத்து 3 நாட்கள் சாப்பிட ஜன்னி குணமாகும்

*லவங்க பொடி நீரில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி பருகினால் கர்ப்ப வாந்தி நிற்கும்

*வெள்ளை பூண்டு சாறு வெற்றிலை சாறு கலந்து தடவி வர எச்சில் புண் குணமாகும்
வெட்டு காயம் சீக்கிரம் குணமாக புங்க இலையை அரைத்து தடவி வரவும்

*நரம்பு தளர்ச்சி சரியாக தினம் 5 அத்தி பழம் சாப்பிடவும்

*மலை வாழை பழத்தை நல்லெண்ணையில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்

*வேப்பம் பூவை வறுத்து போடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்

*நெஞ்சுவலி குணமாக இலந்தை பழம் பேருதவி செய்யும்

*இலந்தை தளிரை கொதிக்க வைத்து போடி செய்து, அதில் வாய் கொப்பளித்து வர தொண்டைபுன் ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாகும்

*தும்பை இலையை அரைத்து தலையில் பற்று போட்டும், 3 நாள் உள்ளுக்கும் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்

*நார்த்தங்காய் இலையை நறுக்கி அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்

*எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் 3 நாட்கள் பிடித்து வர முகம் பளபளப்பாகும்

*சிறிய நங்கை சாப்பிட்டு வர நீரிழிவு பாதிப்புகள் தடுக்கப்படும்

*குங்குமப்பூவை தாய்பால் விட்டு அரைத்து பற்று போட தலைவலி நீங்கும்

*முடக்கத்தான் இலையை நறுக்கி அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட வாதம், பிடிப்பு குணமாகும்.

*வேப்பம் பூ வாந்தியை கட்டுபடுத்தும்
அத்தி பழம் பாலில் கலந்து தினம் அதிகாலை உண்டு வர திக்கு வாய் குணமாகும்

Comments

Popular posts from this blog

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

மூல நோய் விரட்ட

பப்பாளி இலையின் நன்மைகள் - இயற்கை மருத்துவம் - 2